வழக்கம்போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. குறிப்பாக, பெண்களுக்குள் புகைச்சல் ஏற்பட தொடங்கிவிட்டது.
பவித்ரா Vs ஜாக்லின்
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை பவித்ரா அவர்களுக்கும், விஜய் டிவி தொக்குப்பாளினி ஜாக்குலின் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களை சமாதான செய்ய நடிகை தர்ஷா, சௌந்தரியா முயற்சி செய்தாலும் இருவருக்கும் இடையில் சண்டை ஓயவில்லை. பாத்ரூம், படுக்கறை, கிச்சன் என பல இடங்களில் கருத்து வேறுபாடும் சண்டையும் தான்.
இருப்பினும் ஜாக்லின் அவர்களுக்கு சகப் பெண் போட்டியாளர்கள் ஆதரவாக நின்றனர்.

மாறிக்கொண்ட பெண்-ஆண்
தற்போது பிரச்னை என்னவென்றால் ஆண்கள் அணியில் இருந்து ஒரு ஆணும், பெண்கள் அணியில் இருந்து ஒரு பெண்ணும் தங்கள் அணியை மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் அணிக்கு ஒரு பெண் செல்ல வேண்டும். பெண்கள் அணிக்கு ஒரு ஆண் செல்ல வேண்டும்.
யூடிப்பரும், தமிழ் பேச்சாளருமான முத்துக்குமரன் அவர்கள் பெண்கள் அணிக்கு சென்றார். அதேபோல சீரியல் நடிகை பவித்ரா ஆண்கள் அணிக்கு சென்றுள்ளார்.
பாத்ரூம் பிரச்சனை:
இதில் தான் பிரச்சனை உள்ளது. ஆண்கள் அணிக்கு சென்ற சீரியல் நடிகர் பவித்ரா ஆண்கள் பயன்படுத்தும் பாத்ரூமை தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல பெண்கள் அணிக்கு சென்று உள்ள முத்துக்குமரன் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமை தான் பயன்படுத்த வேண்டும். படுக்கும் படுக்கையறை உட்பட.
பிரதீப் ஆண்டனி
கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி பெண்கள் பாத்ரூமினைத் திறந்து பார்த்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த முறையும் பாத்ரூம் பிரச்சனை கட்டாயம் வரும் என ரசிகர்கள் கூறுகின்றனர். நாம் பொருத்திருந்து பார்க்கலாம்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here