பிக்பாஸ் புகழ் தர்சன், காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும், அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ என்ற திரைப்படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.
இந்தப் திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.
தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார். இந்த வரிசையில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள “ஹவுஸ் மேட்ஸ்” அப்டேட் வெளியாக்கியுள்ளது.

இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ்.கே ப்ரொடக்சன் தயாரித்து வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் படத்திற்கு ஹவுஸ் மேட்ஸ் என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வெற்றி படமாக அமையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குடும்பங்கள் கொண்டாட்டம் விதமாக நகைச்சுவை படமாக “ஹவுஸ் மேட்ஸ்” படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here