Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

2வது நாளிலும் வசூல் சாதனை : திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படம் 2 நாளில் உலகம் முழுவதும் ரூ.77 கோடி வசூலித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், பிரசன்னா, சுனில், அர்ஜுன்…

அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் 2 நாளில் உலகம் முழுவதும் ரூ.77 கோடி வசூலித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

Advertisements

முதல் நாளை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “குட் பேட் அக்லி” திரைப்படம் 2 நாளில் உலகம் முழுவதும் ரூ.77 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது நாளான நாளை இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here