வடிவேலுவை கண்டு மிரண்டு போன ரஜினி.. பாட்ஷா உருவாக காரணம்

0
149

Rajini is shocked to see Vadivelu : ரஜினி ஒரு ஹீரோவாக இருந்த போதும் அவரது படமானது நஷ்டத்தை சம்பாதித்த நிலையில் வடிவேலுவின் படம் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. இதை அறிந்து கொண்ட ரஜினி ஆச்சரியப்பட்டு போய் அவர் செய்த விஷயத்தை பார்க்கலாம்.

ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் ரஜினி மீனா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் தான் எஜமான். 1993 ஆம் வருடம் இந்த படம் வெளியான நிலையில் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ரஜினி திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை அழைத்து பேசியிருந்தாராம்.

Rajini is shocked to see Vadivelu
Rajini is shocked to see Vadivelu

அதாவது படம் எவ்வளவு வசூல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு படத்தை வாங்கிய நிலையில் தற்போது வரை 10 லட்சம் கலெக்ஷன் ஆகி இருக்கிறது. இன்னும் சில வாரங்கள் வரை படம் ஓடினால் 20 லட்சம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

பாட்ஷா படம் பற்றி பேசிய இயக்குனர் வி சேகர்

மேலும் வேறு என்னென்ன படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது தியேட்டரில் என்று ரஜினி கேட்டு இருக்கிறார். நாசர், வடிவேலு மற்றும் கோவை சரளா இவர்களது நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறி உள்ளார்.

அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைத்துள்ளது என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார். இதைக் கேட்டு ரஜினி மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த கேரக்டர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் 20 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். ஆகவே தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கேரக்டரில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை அந்தப் படத்தின் இயக்குனர் வி சேகர் கூறியிருந்தார்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் உள்ளது. ஏனென்றால் 1993 இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் ரிலீசான நிலையில் அடுத்த ஆண்டு 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் ரிலீசானது.

அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை நடத்துனராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பேருந்தை கொண்டு படம் எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவை வைத்து எடுக்கலாம் என பிறகு மாற்றப்பட்டுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here