சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்ய முடியாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளை கொண்டு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்படநடிகரும், இயக்குனருமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி செய்தார். பின்னர் படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியான TEENZ படம் இந்தியன் படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனம் பெறாத நிலையில், TEENZ படத்திற்கு சாதகமாக இருக்கிறது. தன் படத்திற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருப்பதால் மகிழ்ச்சியாக ஒரு பதிவை பார்த்திபன் ட்விட்டரில் போட்டிருக்கிறார். இந்த TEENZ படத்திற்கு, வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலகி சென்று கண்காணாத இடத்திற்கு போய் விட முடிவு செய்திருந்தாராம் அவர் இது பற்றி X தளத்தில் அவர் பதிவிட்ட பதிவு,

சத்தியமா சொல்றேன் TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்காமல் போயிருந்தால் நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி போய் கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போய் விட முடிவெடுத்தேன். இப்ப நீங்க அனைவரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு மகிழ்ச்சியில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை மகிழ்ச்சியில சாகடிங்க. அடுத்த தலைமுறையினர் ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் ஒரு science fiction & fantasy thought ல் உருவாக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும், கல்லூரிகளும் மற்றும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.
நன்றி :பார்வை இட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வர இருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இவ்வாறு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பதிவு செய்திருந்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here