Kavya Maran did not even meet Dhoni : காவ்யா மாறனின் செயல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் – குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதன்மூலம், ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த 3 வருடங்களாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் இருந்தது.
இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார். காவ்யா மாறன் வழக்கமாக எந்த அணி வீரர்களையும் மைதானத்தில் சென்று சந்திக்க மாட்டார். ஐதராபாத் அணியின் ஓய்வறைக்கு கூட போகும் பழக்கம் கிடையாது.

தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடினாலும் யாரையும் சந்திக்க மாட்டார். இந்நிலையில், ஐதராபாத் டீமின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சனை சந்தித்து நட்பு பாராட்டி நலம் விசாரித்திருக்கிறார். தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here