குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரையில் அறிமுகமான பிரியங்கா, தமிழ் சினிமா மேல் ஏற்பட்ட காதலால் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்தில் நடித்தார். இந்த சிறுமி.. யார் என்று தெரியுதா?

பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்து பிரபலமானார். ஆமாம், ரோஜா சீரியல் கதாநாயகி ப்ரியங்கா தான் இந்த சிறுமி. திரைப்படங்களின் மூலம் பெற முடியாத பேரும் புகழும் ரோஜா சீரியலால் பிரியங்காவுக்கு உண்டானது. இந்த சீரியல் மூலம் இவர் இரண்டு முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி தனது காதலரை கரம் பிடித்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார் பிரியங்கா. இந்த சந்தோசத்திற்கு பின்னால் அவர் மிகுந்த கஷ்டங்களையும், சிரமங்களையும் கடந்து வந்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்க்காணலின் போது பேசிய பிரியங்கா, “ராகுல் என்கிற கிட்டுவுக்கும் எனக்கும் 2018-ஆம் வருடம், மே மாசம் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நான் செல்லமா அவரை ‘கிட்டுலூ’ன்னு தான் அழைப்பேன். தெலுங்கு சினிமாவிலேயும் சரி டி.வியிலேயும் சரி, அவர் முகம் பரிச்சயம். பரஸ்பரம் 2 பேரும் காதலித்தோம்.
இரண்டு பேரும் ஒரே துறையில இருந்தா சௌகரியமா இருக்கும்னு சிலர் சொல்வாங்க, ஆனா எங்களுக்கு அது தான் வினையா போச்சு. நாளாக நாளாக ஒருத்தரையொருத்தர் பார்க்க, பேசக்கூட முடியாதவாறு என்னோட கால்ஷீட்டும், அவரோட கால்ஷீட்டும் குழப்ப, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு எப்ப திருமணத்தை வச்சுக்கலாம் என்பதில் லேசான மனஸ்தாபம்.

அதனால, ‘எனக்கு இந்த ஃபீல்டே வேண்டாம்’னு கோபிச்சுட்டு மலேசியாவிற்கு சென்று, அங்க ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். என்னிடம் பேசாம என் ஃபோனையும் எடுக்க மாட்டேங்குறார். இந்த பிரச்னை எல்லாம் சீக்கிரம் முடியணும்ன்னு கடவுளை வேண்டிட்டு இருக்கேன்” எனத் தெரிவித்திருந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக ராகுலை திருமணம் செய்துள்ளார் பிரியங்கா. இவர்களது திருமணம் மலேசியா முருகன் ஆலயத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்யாணம் ரகசியமாக நடைபெற்றுள்ளதாக அனைவரும் கமெண்ட் செய்த நிலையில், பிரியங்கா நல்காரி மறுத்துள்ளார் . இந்நிலையில் கல்யாணத்திற்கு பிறகு நேரலையில் வந்த பிரியங்கா, அந்த தகவலை மறுத்துள்ளார். தன்னுடைய திருமணம் குடும்பத்தினர் சம்மதத்தோடு தான் நடந்தது என்றும் ஆனால் ராகுல் வீட்டில் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவர்கள் ஒப்புக்கொண்டதும் அனைவரும் சேர்ந்து இந்த கல்யாணத்தை கொண்டாடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக உள்ள பிரியங்கா, தற்போது தனது தாயுடன் உள்ள சிறுவயது போட்டோவை பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here