தியேட்டரில் இருந்து பாதியிலேயே ஓட செய்த ஐந்து படங்கள்.. மொத்த பெருமையும் தோளில் சுமந்த பிரேம், மனோஜ்

0
188
Five films that ran half way from the theatre
Five films that ran half way from the theatre

எப்படி ரீ-ரிலீஸ் செய்து காசு அள்ளிக்கலாம் என நினைக்கும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் தியேட்டரை விட்டு ஓட செய்த ஹீரோக்கள் ஏராளம். அதிலும் சில முக்கியம் வாய்ந்த கதாபாத்திரங்களை மறைக்கவே முடியாது அப்படிப்பட்ட படங்களின் வரிசைகளை தற்போது காணலாம்.

புலி வேஷம்: எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆர் கே என்ற ராதாகிருஷ்ணன். இவருக்கு இந்த படம் நன்றாக ஓடியது. அதனை வைத்து இவர் நடித்த புலி வேஷம் என்ற படத்தை காண சென்றவர்களுக்கு புலி பிராண்டியது போல் இருந்தது. ஒரு காட்சிக்கு தியேட்டரில் 2 பேர் மட்டுமே வந்திருந்தனர். காட்சி கேன்சல் செய்யப்பட்டது.

தேவ்: பருத்திவீரன் கார்த்தியால் அந்த படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தில் இருந்து இன்று வரை மீளவில்லை. இயக்குனர் இந்த படத்தை அனுராக் காசிப் இடம் பணியாற்றிய அசிஸ்டன்ட் ரவிசங்கர் இயக்கினார். இது பையா படம் போல் இருக்கும் என நம்பி ஏமாந்து பாதியிலேயே ஓடி வந்த ரசிகர்கள் ஏராளம்.

மொத்த பெருமையையும் தோளில் சுமந்த பிரேம், மனோஜ்

அல்லி அர்ஜுனா: காதல் மன்னன், அமர்க்களம் மற்றும் பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர் சரண். இவரை நம்பித்தான் இந்த படத்தை பார்ப்பதற்கு பல பேர் சென்றனர். ஆனால் ஏன் வந்தோம் என பாதியில் விரட்டிய பெருமை இயக்குனர் சரன் மற்றும் நடிகர் மனோஜை சேரும் .

வாரார் சண்டியர்: இதில் நடித்த ஹீரோ பற்றி பல பேருக்கு தெரியும். இவர் படங்கள் எப்பொழுதுமே ஹாலிவுட் படங்கள் போல தான் இருக்கும். நடிகர் பிரேம் குரோதம் என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு கதாநாயகன். இவர் மற்றும் குஷ்பு சேர்ந்து நடித்த படம் வாரார் சண்டியர். இந்த படத்தைப் பார்த்த பாதி பேர் இடைவேளை விடுவதற்கு முன்பே ஓடி விட்டனர்.

இதய திருடன்: ஜெயம் ரவி எதற்கு இது போன்ற படத்தில் நடித்தார் என்று இன்றுவரை பல பேருக்கு புரியாத புதிராக உள்ளது. இந்த படம் தயாரிப்பாளருக்கு ஒரு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த படமும் பல வெற்றி படங்களை இயக்கிய சரணின் படம் தான்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here