அந்த விஷயத்தில் கதாநாயகிகள் போராட வேண்டியதா இருக்கு.. ரஜினி பட நடிகை வேதனை!!

0
62

கடந்த 2010 -ம் ஆண்டு ரிலீசான தபாங் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான லிங்கா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோனாக்ஷி சின்ஹா, ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து கூறியுள்ளார். அதில் அவர், ஹீரோக்களுக்கு எத்தனை கோடி கேட்டாலும் தருகிறார்கள். ஆனால் கதாநாயகிகளுக்கு அப்படி இல்லை. அவர்களிடம் பேரம் பேசி சம்பளத்தை குறைக்க சொல்கிறார்கள். சம்பளத்தை வாங்குவதில் நடிகைகள் போராட வேண்டியது இருக்கிறது.

நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கொடுக்கிறார்கள். இருப்பினும் சம்பளம் விஷயத்தில் மட்டும் பாரபட்சம் செய்கிறார்கள் என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here