நடிகர் தனுஷின் பிரமாண்ட வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா! இதோ பாருங்க

0
66

தனுஷ்

இந்திய சினிமாவையும் கடந்து ஹாலிவுட் வரை சென்றுள்ளார் தனுஷ். உலகளவில் தனக்கென்று தனி அங்கீகாரத்தை பெற்றிருக்கும் இவர் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகபோகிறது. ஆனால், இந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர். அதை நாம் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

actor Dhanush’s huge house is worth

போயஸ் கார்டன்

கடந்த வருடம் நடிகர் தனுஷ் தன்னுடைய சொந்த வீட்டை கட்டி முடித்துள்ளார். போயஸ் கார்டனில் அமைந்துள்ள இந்த வீட்டை நவீன டெக்னாலஜியுடன் தனுஷ் கட்டியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்களின் வீடுகளும் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது.

வீட்டின் விலை

இந்த நிலையில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள நடிகர் தனுஷ் வீட்டின் விலை ரூ.150 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. திரையுலக நட்சத்திரங்களின் வீடுகளில் அதிக மதிப்பில் கட்டப்பட்டுள்ள முக்கியமான ஒன்று தனுஷின் வீடு என பேசப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here