பிரேம்ஜி திருமணம்.. எங்களது பிரைவசியை மதிங்க!! வெங்கட் பிரபு வேதனை..

0
153

பிரேம்ஜி

நடிகர் பிரேம் ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணுடன் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் ஆலயத்தில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ கல்யாணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது.

மணப்பெண் இந்து, மீடியாவில் பணியாற்றி கொண்டிருகிறார் என்று இணையத்தில் செய்தி வெளிவந்தது.

விளக்கம்

இது சம்பந்தமாக வெங்கட் பிரபு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இத்தனை ஆண்டுகளாக என் குடும்பத்தினருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் அளித்த ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

“பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இவை அனைத்தையும் விட, “பிரேம்ஜிக்கு திருமணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி குறைந்த அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கை பிடிக்கிறார்.

அம்மா மிகவும் எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் சாதாரண முறையில் நடத்த விரும்புகிறோம்! இது தெரியாமல் நண்பர் ஒருவர் கல்யாணப் பத்திரிக்கையை பொது வெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி திருமணப்பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் போட்டோக்கள் உலவுகின்றன.

மணமகள் மீடியாவைச் சேர்ந்தவரல்ல. திருமணம் முடிந்தவுடன் போடோக்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் எல்லோரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் மிக விரைவில்…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here