நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் சேர்ந்து நடிக்கும் புதிய படம் குறித்து தகவல்கள் தான் இப்போது இணையதளத்தில் பரவி வருகிறது. மேலும் இப்படம் ‘பாங்காக்கில்’ படம் எடுக்கப்படுவதாகவும், அங்குள்ள மாரியம்மன் ஆலயம் ஒன்றில் சில நாட்களுக்கு முன் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிகிறது..பல நாள் கழித்து ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் சேர்ந்து நடிப்பதால் இப்படம் மக்கள் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது 2 வது மனைவி தமிழ் நடிகை மஞ்சுளா இவர்களின் மூத்த மக்கள் வனிதா. இவர் தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற தெனிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த இவர் 1995 ஆம் வருடம் நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார்.
நடன இயக்குனர் ராபர்ட் குறித்து:
நடன இயக்குனர் ராபட்டின் முழு பெயர் ‘ராபர்ட் ராஜ்’ என்பதாகும்.1991 ஆம் ஆண்டு ‘அழகன்’ என்ற படத்தின் மூலம் ராபர்ட் தனது சினிமா வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக (மம்முட்டியின் மகனாக) நடிக்க தொடங்கினர். அதனைத் தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்தார். அவர் நடனமாடிய பாடல்களில் கேமியோ கேரக்டர்களிலும் நடித்து வந்தார். மேலும் அவர் 2022 ஆம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 6’ கலந்து கொண்டது நாம் அறிந்தவையே.

வனிதாவும் ராபர்ட்டும்:
மேலும், ராபர்ட் மாஸ்டர் வத்திக்குச்சி வனிதாவின் கணவர் என்பது நம் எல்லோரும் அறிந்த ஒன்று. இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடுகளால் ராபர்ட் மாஸ்டரை பிரிந்து விட்டார் வனிதா. அதுமட்டுமில்லாமல் ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படம் பற்றிய தகவல்:
நடிகை வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் நடிக்கும் புதிய படத்தை குறித்து பட குழுவினர் சொல்லும்போது, இப்படத்தின் பெயர், “மிஸ்டர் & மிஸஸ்” என்றும் வனிதா- ராபர்ட் காம்பினேஷன் என்பது ஆரம்பத்தில் உண்மையா இருந்த ஒன்றுதான் என்று சொல்லி இருந்தனர். மேலும் வனிதா பெயரை ராபர்ட் டாட்டு குத்தி இருந்ததும் 2 பேரும் இணைந்து நடிச்சதெல்லாம் கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிஞ்ச விஷயம் என்றனர்.

அதனைத் தொடர்ந்து பட குழுவினர், வனிதா தான் ராபர்ட் மாஸ்டர்க்கு பிக்பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என அவரே கூறி இருக்கிறார். மேலும் “வனிதா என்றாலே ‘வைரல் நியூஸ்’ தான் என்கிற நிலைமையில், வனிதா -ராபர்ட் மாஸ்டர் காம்பினேஷன் கட்டாயம் ட்ரெண்ட் ஆகும் என்கிற ஐடியாவை வைத்து ஒரு கதை ஓகே ஆக, அவர்கள் 2 பேரும் ஜம்முனு சூட்டிங் கிளம்பிட்டாங்க” என்று புன்னகை செய்தனர்.
படத்தில் நடிக்கும் பிரபலங்கள்:
மேலும் ,இந்த படத்தில் ரவிகாந்த் வனிதாவின் அப்பாவாகவும், ஷகீலா அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் போன்றோரும் நடிக்கிறார்கள் என்று சொல்லியிருந்தனர். அதனைத் தொடர்ந்து வனிதாவின் மகள் ஜோதிகாவும் தயாரிப்பு வேலையில் பணி செய்கிறார்.படத்தின் தயாரிப்பாளர் வனிதாவின் நண்பர் ‘ஜேஷ்’ என்றும் தமிழ்நாட்டில் பிறந்து அவர் ஆஸ்திரேலியாவில் கட்டுமான பிசினஸ் செய்யும் தொழிலதிபர் என்றும் பகிர்ந்திருந்தனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here