ஜெய்சங்கர்
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர்.
இவர் பெரும்பாலும் காவலர், துப்பறியும் கதாபாத்திரம், சண்டை காட்சிகள் உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
இவர் குழந்தையும் தெய்வமும், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கருந்தேள் கண்ணாயிரம், சி.ஐ.டி.சங்கர் மற்றும் பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு உள்ளிட்ட படங்களில் மிகவும் பிரபலமானவர்.

ரஜினிகாந்தின் முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்து அசத்த அதன்பின் சில படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
நல்ல மனம் கொண்டவர், எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவி செய்யும் இயல்புடையவர்.
நடிகரின் மகன்
ஜெய்சங்கர் அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், அதில் ஒருவர் கண் மருத்துவர். தனது தந்தையின் பிறந்த நாள் அன்று 15 இலவச கண் அறுவை சிகிச்சைகளை செய்கிறார்.
இன்னொரு மகன் சஞ்சய் சங்கர் இசை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here