23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி

0
133

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் “சிங்காநல்லூர் சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது.

ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து இருக்கிறது.

நடிகர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here