தங்கலானுடன் மோத ரெடியான அந்தகன்..வெளியிடும் தேதியை அறிவித்த பிரஷாந்த்!

0
513

சென்னை: நடிகர் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன்,மற்றும் யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அந்தகன் படத்தை அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் நீண்ட காலங்களாகவே வெளியிடுவதற்கு தயாராகி வந்த நிலையில் இன்றைய தினம் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரஷாந்த் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அந்தகன் படத்தின் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி என அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் வரும் மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே விக்ரமின் தங்கலான் படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரஷாந்த்: பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகி இருக்கும் படம் அந்தகன். பிரஷாந்த் நடிப்பில் அவரது அப்பாவும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இயக்கி உருவாகியுள்ளார். இந்த அந்தககன் படம் நீண்ட நாட்களாக வெயிடுவதற்கு தயாராகி வந்தது. இந்த படத்தில் பிரஷாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக்,, யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், மனோபாலா மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் ரிலீசாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

அந்தகன் ரிலீஸ்: இந்நிலையில் இந்த படத்தை வெளியிடுவது பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதையொட்டி படத்தின் போஸ்டருடன் நடிகர் பிரசாந்த் வெளியிடும் செய்தியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெறிவித்துள்ளார். படம் வரும் மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ரிலீஸாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விக்ரமுடன் மோதுவதற்கு பிரசாந்த் தயாராகியுள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ்: தங்கலான் மற்றும் அந்தககன் என 2 படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்த 2 படங்களும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் 2 படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியுள்ளது. தங்களான் படமும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் செய்யும் தேதி தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு ரிலீசானது தள்ளிப் போய் இருக்கிறது. இந்நிலையில் அந்தகன் படமும் அன்றைய தினமே வெளியாக உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் பிரஷாந்த் கண் தெரியாத இளைஞராக நடித்துள்ளார்.

மிரட்டிய ட்ரெயிலர்: இந்த படத்தின் ட்ரெயிலர் அண்மையில் ரிலீசாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தகன் பிரசாந்தின் ரீ-என்ட்ரி படமாக ரிலீசாகவுள்ள நிலையில், இந்த படம் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப்படம் மட்டுமில்லாமல் விக்ரமின் தங்கலான் படமும் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 படங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here