இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பிதா’!
S.R .பிலிம் பேக்டரி G. சிவராஜ் தயாரிப்பில், S. சுகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், சர்வதேசம் முழுவதும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.

காது கேளாத, வாய் பேச முடியாத 10 வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும் மற்றும் தனது அக்காளையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. திரளான மக்கள் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் ஷூட்டிங் நடத்தி, பலரது பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் S.சுகன்.

ஒரே நைட்டில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா மற்றும் தொழில் அதிபர் கடத்தல் என திட்டமிட்ட குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.

ஆதேஷ் பாலா, மாஸ்டர் தர்ஷித், சாம்ஸ், ஸ்ரீராம் சந்திரசேகர், அருள்மணி, அனு கிருஷ்ணா, ரெஹனா மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

S.சுகன் விறுவிறுப்பாக மங்காத்தா, சூது கவ்வும் பட பாணியில் இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை K.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு S.R.பிலிம் பேக்டரி G.சிவராஜ், ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறார்!
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here