இந்த ஆண்டு கோலிவுட்டை புரட்டி எடுத்த 5 சம்பவங்கள்.. மாஸ் இந்தியன் தாத்தாவை தமாஸ் தாத்தாவாக மாற்றிய 2k கிட்ஸ்

0
141

Indian 2: இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து பெரிய கதாநாயகர்களின் படம் அடுத்தடுத்து ரிலீசாகி கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் போட்டி போட்ட நிலையில் லால் சலாம் மற்றும் ரத்னம் போன்ற படங்கள் வெளிவந்தது.

ஆனால் இவை எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதற்கு அடுத்ததாக அரண்மனை 4 ரிலீசாகி ஆடியன்ஸை திரையரங்கு பக்கம் வர செய்தது. அதற்கு அடுத்தபடியாக ரிலீசான கருடன், மகாராஜா போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தது.

இருப்பினும் இந்த 7 மாத காலத்தில் தமிழ் சினிமாவில் நம்ப முடியாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்ட 5 நிகழ்வுகளை பற்றி இங்கு காண்போம்.

முதலாவதாக கடந்த சில ஆண்டுகளாக சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை கண்டது. அதை மாற்றும் விதமாக அரண்மனை 4 மூலம் அவர் மறுபடியும் முந்தைய நிலைக்கு வந்து விட்டார். ஆனால் இந்த தரமானஹிட்டுக்கு அரண்மனை 4 பட நாயகிகளின் கவர்ச்சி ஆட்டமும் ஒரு காரணம்.

அடுத்ததாக நாம் நகைச்சுவை நடிகராக இதுவரை பார்த்து ரசித்த சூரி தற்போது கதாநாயகனாக தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். ஏற்கனவே விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த சூரியை மக்கள் ஹீரோவாகவே ஏற்றுக் கொண்டனர்.

கதையின் நாயகனாக ஜெயித்த சூரி

ஆனால் அதைத் தாண்டி கருடன் படத்தில் அவரது நடிப்பு கதாநாயகனாக மேலும் மெருகேறியது. அடுத்ததாக சிங்கம் புலி மகாராஜா படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இயக்குனராக, நகைச்சுவை நடிகராக இருந்த இவர் இந்த ஆண்டு வில்லனாகவும் மாறி இருக்கிறார். இதற்கு அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என நாம் கொண்டாடிக்கொண்டிருந்த ஷங்கர் இன்னும் பழைய பஞ்சாங்கமாக உள்ளார் என இந்தியன் 2 படத்தின் மூலம் கடும் விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளது.

இது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி தான். அதனால் தன் அடுத்த படமான கேம் சேஞ்சர் மூலம் இதை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவர் இருக்கிறார். அடுத்து நாம் 90 காலகட்டத்தில் மாஸாக கொண்டாடிய இந்தியன் தாத்தா 2k கிட்ஸ்களால் தமாஸ் தாதாவாக மாறியிருக்கிறார்.

இதனால் கமல் இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆகவும் மாறியுள்ளார். இது இந்த ஆண்டின் எதிர்பாராத நிகழ்ச்சி ஆகும். அது மட்டுமில்லாமல் கல்கி படத்தில் சுப்ரீம் யாஸ்கின் என்ற வில்லனாக அவர் தோன்றினதும் இந்த ஆண்டின் அடுத்த சம்பவம்.

இப்படியாக இந்த 5 சம்பவங்களை கடந்து விஜய் சினிமாவுக்கு குட்பை சொல்லப்போவது, அம்பானி வீட்டு கல்யாண விழாவுக்கு போன ரஜினியை நெட்டிசன்கள் வச்சி பண்ணியது என அநேக நிகழ்ச்சிகள் இருக்கின்றது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here