16 வயது பள்ளி சிறுமி போல மாறிய நடிகை மீனா! ட்ரெண்டாகும் வீடியோ

0
99

16 வயது பள்ளி சிறுமி போல நடிகை மீனா இரட்டை ஜடையில் பகிர்ந்து உள்ள போட்டோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். பின்பு முன்னணி நடிகர்களுடன் நடித்து எல்லோருக்கும் பிடித்த நாயகியாக மாறியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருவதுடன், இவரது மகள் நைனிகாவும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்க முடியாத மீனா சோகத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பின்பு அவரது தோழியான கலா மாஸ்டர் கொஞ்சம் கொஞ்சமாக சோகத்திலிருந்து அவரை மீட்டு, தற்போது இயல்பு நிலைக்கு மாறியுள்ளார். சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு, இப்போது ரிவி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார் மீனா.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போடோக்களை வெளியிட்டு வரும், நடிகை மீனா தற்போதும் தனது தோழியும், நடிகையுமான சங்கீதா கிரிஷ் உடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் இருவரும் இரட்டை ஜடை போட்டு 16 வயது பள்ளி சிறுமியாக தோன்றுகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here