சீரியலில் களம் காண போகும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்… எந்த டிவியில் தெரியுமா?

0
52

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். தற்போது சின்னத்திரையில் சீரியல் பக்கம் கால் பதிக்க போவதாக ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

90களில் இருந்து தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் அர்ஜூன் வெற்றி படங்கள் நடித்து பிரபலமடைந்தவர். சினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு மத்தியில் ஒரிஜினல் சண்டை சீன்களை கொண்டு வந்த புகழ் அர்ஜுனையை சேரும்.

ஹீரோவாக நடித்து கொண்டிருந்த அர்ஜுன் நாட்டுப்பற்று படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். ஆனால் தற்போதைய காலங்களில் அவர் அதிக அளவில் வில்லன் கேரக்டர்களில் நடித்து ஹிட்டடித்து வருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் ரிலீசான லியோ படத்தில் ஆண்டனி தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் டிவி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு சீரியலை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அர்ஜுன் ஜீ தமிழ் டிவிக்கு சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதியை தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அர்ஜுனின் சீரியல் பற்றி முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக சீரியல் நிர்வாகத்தால் வெளியிடப்படும் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here