தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவும், அந்தரங்க விஷயங்களும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் 90’ஸ் நடிகைகளும் சிக்கி உள்ளனர். தற்போது 90 காலக்கட்ட நடிகைகள் வெளிப்படையாக யூடிப் சேனல்களில் இதுபற்றி பேசி வருகின்றனர்.
ஏன் அப்போது பேசாமல் இப்போது வாய் திறக்கிறீர்கள் என்று சிலர் கேள்விகளை எழுப்பினாலும் அப்போது பேசினால் எங்கள் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும், அதனால் இப்போது பேசுகிறோம் என்று சாதாரணமாக பதிலளிக்கின்றனர்.
90’ஸ் கால சினிமா கதாநாயகன் திரைப்படங்களில் கவர்ச்சி காட்ட மறுத்தாலும், திரைக்குப் பின்னால் சில நடிகர்கள், சில இயக்குனர்கள், சில தயாரிப்பாளர்களுடன் ஓட்டல்களில் தனி அறையில் ரகசியமாகத் தங்கி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்த 90’ஸ் ஹீரோயின்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அவர்கள் எதிர் கொண்டு தான் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
90’ஸ் நாயகிகளின் தில்
தற்போது உள்ளதை விட அப்போது நிறைய பாலியல் தொந்தரவுகள் வரும் என்றும் அதனை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது வெளிப்படையாக டிவி சேனல்கள், யூடிப் சேனல்களில் நடிகைகள் பேசுவது ஆச்சரியமாக உள்ளதாக மூத்த நடிகை ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here