Home Entertainment தியேட்டரில் தோல்வி : ஓடிடி-யில் மாபெரும் வெற்றி -சாதித்து காட்டிய காதல் திரைப்படம்

தியேட்டரில் தோல்வி : ஓடிடி-யில் மாபெரும் வெற்றி -சாதித்து காட்டிய காதல் திரைப்படம்

0
146

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ஒன்று தியேட்டர்களில் ரூ. 12 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்து படு தோல்வியடைந்தது. இருப்பினும், ஓடிடி தளத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று ட்ரெண்டிங்கில் இந்த படம் முன்னணியில் உள்ளது.

தியேட்டரில் தோல்வி: 

கடந்த ஆகஸ்ட் மாதம் “ஆரோன் மே கஹான் தம் தா” என்ற படம் தியேட்டர்களில் வெளிவந்தது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடம்பெற்றிருந்தனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியிருந்தது. தியேட்டர் ரிலீஸில் இந்த படம் ரூ. 12.91 கோடி மட்டுமே வசூலித்ததால் தயாரிப்பாளர்களும்,படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக ஓடிடி ரிலீஸில் இந்த படம் அதிக பார்வையை பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 அன்று, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. படம் வெளியான உடனேயே பிரபலமானது. இது தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படம் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதிலிருந்து ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடி தளத்தில் விரும்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

காதலே மையம் : 

காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். இந்த படத்தை 16 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்க நினைத்ததாகவும், ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படக்குழு மகிழ்ச்சி : 

அதிக அளவில் தியேட்டர்களில் வெளியான போதும், இப்படத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் “ஆரோன் மே கஹான் தம் தா” படத்தை கண்டு களித்து வருகின்றனர். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here