தயாரிப்பாளரும், பிக் பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளரான ரவீந்தர் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் வீட்டிற்குள் இருக்கும் போதும், அவர் பிரச்னை செய்யாத ஆட்களே இல்லை. அனைவரிடமும் ஏதோ ஒரு பிரச்னை செய்து வந்தார். குறிப்பாக சக ஆண் போட்டியாளர்களுடன். இவர் நேற்று வெளியே வந்த பிறகு, விஜய் சேதுபதி அவரிடம் வீட்டிற்கு நடந்த விசயங்கள் பற்றி சகஜமாக கேட்டார்.
அதற்கு ரவீந்தர், “முதல்ல ரெண்டு நிமிஷம் விட்டுடுங்க சார்.. என்னை அவங்க வாழ்த்திடட்டும். அப்புறம் பாருங்க.. வெச்சு செய்யறேன். இப்ப பாருங்க. எப்படில்லாம் நெஞ்ச நக்குவானுங்கன்ட்டு” என்று ரவீந்தர் சொல்லிட்டு வில்லதனமாக சிரிச்சார்.
நெருப்பை பற்ற வைத்த ரவீந்தர்
ரவி சொன்ன மாதிரியே ‘அண்ணன்.. நல்லவரு.. வல்லவரு..’ என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, கூட்டம் வெடித்து சிரித்தது. உள்ளே இருந்தவர்களுக்கு இதன் காரணம் புரிந்திருக்காது. வீட்டில் உள்ள அனைவரும் வின்னல்கள் என்று ரவீந்தர் சொன்னது உண்மையாகி விட்டது.

ரவீந்தர் பிக்-பாஸ் வீட்டிற்கு உள்ளவர்களை பற்றி ஜாலியாக பேசினார். அவர் பேசியதாகவது, “அர்னவ்.. நீ பக்கா ஃபேக்.. ரஞ்சித் சார். ‘சாமி.. தங்கம்ன்னு சொல்லிட்டிருக்கறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. ரொம்ப நாளு நடிக்க முடியாது.. தீபக்கு.. எதிரியை பின்னாடி அடிக்கக் கூடாது. முன்ன பின்ன பேசக் கூடாது.. அருண்… நீ ஒண்ணும் அத்தனை அப்பாவி இல்ல.. சத்யா தம்பி.. பாடி முக்கியமில்ல. மைண்டுதான் முக்கியம். விஷாலு தம்பி.. உனக்காக நீ யோசிச்சு விளையாடு… ஜெஃப்ரி.. வாயைக் கட்டுப்படுத்து.. பவித்ரா.. நீ ரியல் இல்ல.. முத்து.. நல்லா விளையாடு.. சவுந்தர்யா. என்று அடுத்தடுத்து சரவடியாக கமெண்ட்களை சிதறவிட்டார்.

சரவடி ஓப்பினீயன்
மேலும் அவர் பேசியதாகவது, “சாய்ஞ்சு உக்காந்துடாத.. முன்னாடி நகர்ந்து போ.. தர்ஷா.. நீ பாதி ஃபேக்… தர்ஷிகா. நீ செம்ம கேடி.. சாச்சனா.. தேவைப்பட்ட இடத்துல மட்டும் பேசு.. ஜாக்குலின்.. நீ கலக்கு.. நல்லா விளையாடு.. ஆனந்தி.. நீயொரு நல்ல human. பயப்படாம ஆடு” என்றெல்லாம் அதிரடியான கருத்துகளைச் சொன்ன ரவி “சுனிதா. இந்த வீட்டிலயே நீதான் ஒரிஜினல் ரியல். தமிழ்நாடே உன்னைக் கொண்டாடும்” என்று புகழ்ந்ததைக் கேட்டு நெகிழ்ந்தார் சுனிதா.
ரவியின் அதிரடியான கருத்துகளை கேட்ட உடன்,‘இது அவரோட கருத்துதான். எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’ என்று ஜாலியாக சொல்லிட்டு வழக்கமாக பின்வாங்கினார் விஜய் சேதுபதி.
இனிதான் ஆட்டமே ஆரம்பம் என்று பிக் பாஸ் ரசிகர்கள் சத்தம் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here