Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நடிகர் பார்த்திபன் போட்ட போடு : நடவடிக்கை எடுத்து ரயில்வே துறை

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் அவர்களின் புகாருக்கு தென்னக ரயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.  13.10.2024ல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் நடிகர் பார்த்திபன்…

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் அவர்களின் புகாருக்கு தென்னக ரயில்வே துறை தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

13.10.2024ல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் நடிகர் பார்த்திபன் பயணித்துள்ளார். இரவு உணவில் வழங்கப்பட்ட சிக்கன் உணவு ரொம்ப மோசமாக இருந்துள்ளது. மேலும், இரவு வழங்கப்பட்ட உணவு வகைகளும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரயிலில் பயணித்த பயணிகள் பலரும் இதைக்கண்டு ஆத்திரப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார்கள் அளித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த, நடிகர் பார்த்திபன் மற்றவர்கள் போல் இல்லாமல், தென்னக ரயில்வே துறைக்கு புகார் புத்தகத்தில் தனது புகாரை தமிழில் எழுதி தெரிவித்துள்ளார். 

அதாவது, “’உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர்.  நல்லா சுகாதாரமாக இருந்தது.   ஆனால், இரவு 19.22க்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது.   உணவுக்காக பெருந்தொகை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்’’ என்று ரயில்வே புகார் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார் நடிகர் பார்த்திபன்.\

இதுதொடர்பான புகைப்படமும், இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

இதனையடுத்து, தெற்கு ரயில்வே துறை நிர்வாகத்தின் உத்தரவின்  பேரில் நடந்த விசாரணையில் தரமில்லாத உணவு வழங்கப்பட்டது உறுதியானது.  அந்த உணவை வழங்கியது சேலம் ஒப்பந்த தாரர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சேலம் ஒப்பந்த தாரருக்கு அபராதம் விதித்த சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், இனிமேல் தரமற்ற உணவு வழங்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இனி வந்தே பாரத் ரயிலில் உணவு சரியாக, சுவையாக இருக்கும் என பயணிகள் நம்புகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here