இளைஞர்களை தூண்டிய சேலைக் கட்டிய கவர்ச்சி கன்னி: யார் இந்த டிராகன் பட நடிகை?

0
96

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.  அதில் நடித்த கயாடு லோஹர் என்ற நடிகை சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார்.

டிராகன் படத்தில் 3 நாயகிகள் நடித்துள்ளார்கள். அதில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாது லோஹர் என்ற நடிகையை படம் வெளியான நாள் முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள்.

யார் இந்த திடீர் கவர்ச்சி கன்னி?

நடிகை கயாது லோஹர், அஸ்ஸாமை பூர்விகமாகக் கொண்ட முதல்முறையாக கன்னடத்தில் அறிமுகமானவர். பிறகு ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற மலையாளப் படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

தமிழில் டிராகன்தான் முதல்படம். அடுத்ததாக அதர்வா நடிக்கும் “இதயம் முரளி” படத்தில் நடித்து வருகிறார்.

டிராகன் படத்தை கயாது லோஹருக்காக மட்டுமே பார்க்கலாம் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் கயாது லோஹருக்காக பல விடியோக்களை எடிட் செய்து வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இன்ஸ்டாகிராமில் நடிகை கயாது லோஹருக்கு ஃபாலோயர்களும் கணிசமாக உயர்ந்திருந்து வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு இளைஞர்களின் கனவு கன்னி நடிகை கயாது லோஹர் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here