ரசிகர்களுக்கு என்று ரிஸ்க் எடுப்பதெல்லாம் தலைக்கு ரஸ்க் சாப்பிடுவது போல.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருக்கும், நடிகர் அஜித் மற்றும் டைரக்டர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
மேலும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா போன்ற பலரும் நடிக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றது.
மேலும் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் ஆரவ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அந்த வீடியோவும் வெளியானது. இதனால் தல ஃபேன்ஸ்கள் பயந்து போய் “பாத்து தல” என்று அனுதாபம் தெரிவித்தனர். இந்த வீடியோவும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிக படுத்தியது.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் கமிட்டாகி இருக்கும் நடிகர் ஜீவா ரவி கொடுத்த பேட்டி ஒன்றில், அஜித் விடாமுயற்சி படத்தில் இளமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது நான் “விடாமுயற்சி படத்தில் கடந்த டிசம்பர் மாதம் கமிட் ஆனேன். இயக்குனர் மகிழ் திருமேனி எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர். அவருடைய முதல் படம் தடையறத் தாக்க படத்தில் இருந்து நான் அவருடன் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்.விடாமுயற்சி படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் இளமையான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அஜித். இளமையான கதாபாத்திரத்தில் அஜித்தை பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகப் போகிறார்கள் என்பது உறுதி.
எனக்கு இந்த மாதம் இறுதியில் ஷூட்டிங் இருக்கிறது. எல்லா நடிகர், நடிகைகளுடனும் எனக்கு ஸீன் இருக்கிறது. ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்து அப்டேட் கொடுக்கிறேன்” என செம்ம பாஸிட்டிவ் ஆக தெரிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here