தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. உலக அழகியான பின் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். பின்பு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கடந்த 2007ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இருவரும் பிரிய போவதாகவும், விரைவில் இந்த பிரச்சினை வெளி உலகிற்கு தெரியும் என்று சொல்லப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுடன் மட்டுமே வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு என்ன?
ஐஸ்வர்யா ராய் பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய். அதன்மூலம் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வசூலிப்பதாகவும், பிராண்ட்களின் ஷூட்டிங்கிற்காக ஒரு நாளைக்கு 6 முதல் 7 கோடி ரூபாய் வரையிலும் சம்பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை வைத்துள்ளதாகவும், இவரை விட கணவர் அபிஷேக் 3 மடங்கு குறைவான சொத்துக்களை கொண்டுள்ளாராம். கணவர் அபிஷேக் பச்சனின் சொத்தின் மொத்த மதிப்பு 280 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here