மீண்டும் ஜெயம் ரவியாக…. ரவி மோகன் : ரீ ரிலீஸ் செய்யப்படும் பிளாக் பஸ்டர் மூவி

0
93

ரவி மோகன் நடித்துள்ள ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படம் வரும் 14-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்தப் படத்தில் ரவி மோகன், அசின், பிரகாஷ் ராஜ், நதியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படத்தை ஜெயம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குத்துச்சண்டியை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. இருப்பினும் அம்மா -மகன் சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற “நீயே!… நீயே…!” பாடல் அம்மாவுக்கும், மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை உறவை பிரதிபலித்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காமெடி, ஸ்போர்ட்ஸ், எமோஷனல் டிராமாவாக உருவான இந்தப் படம் வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆஃபீஸில் கோடிகளை குவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரீ-ரிலீஸ் செய்யப்படும் இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here