தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் தான் விஜய்யுடன் யுவன் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து லைலா, சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரப்போகிறது.
சமீபத்தில் தான் இப்படத்திற்கான டீ ஏஜிங் பணிக்காக விஜய், வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர். அங்கு விஜய்யை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார். சென்னையில் இன்னும் சில தினங்கள் மட்டுமே விஜய்யின் காட்சிகள் படமாக்கப்படும் என பேசப்படுகிறது.

படப்பிடிப்பு புகைப்படம்
இந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி GOAT படத்தின் படப்பிடிப்பில் இருந்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பை வெளியிடுங்கள் என்ற கோரிக்கையும் வைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here