Tamil Movies : கடந்த சில காலங்களாகவே மலையாள சினிமாகள் வெளியாகி கேரளாவில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் கூடுதலான ஹைப்பை உண்டாக்கி வருகிறது. கதையின் அமைப்பு , கதாபாத்திரங்கள், பயன்படுத்தபடும் தொழில் அம்சங்கள் என புது விஷயங்களை உள்ளே புகுத்தி சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இன்றைய மலையாள திரைப்படங்கள்.

அதிகப்படியான நல்ல கதைகளம் அமைந்த மலையாள சினிமாவால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மலையாள படங்களுக்கான ஓப்பனிங் மிகவும் வளர்ந்து இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய காலங்களில் வெளியான காதல் தி கோர், பிரம்மயுகம், பிரேமாலு, மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய மலையாள படங்களுக்கு தமிழ் மக்களிடம் பேராதரவு பெற்று வருகிறது.
சொல்லப்போனால் தமிழ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை காட்டிலும் மலையாள படங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. அதேப்போல, கேரளாவைவிட தமிழ்நாட்டில் கூடுதலாக வசூல் செய்து கொண்டிருக்கிறது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.
அந்த வகையில் சேட்டன்கள் தமிழ்நாட்டில் சம்பவம் செய்வதாக கேரளா சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் கிடையாது எனும் வகையில் தமிழ் திரைப்படம் ஒன்று கேரளாவில் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அங்கு சென்று நாங்களும் சம்பவம் செய்வோம் என சொல்லும் அளவிற்கு இந்த அறிவிப்பு இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள அதிகமான திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரீரிலீஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்று, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
மார்ச் 15ஆம் தேதி கேரளாவில் உள்ள திரையரங்குகளில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். இது சம்பந்தமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த விஷயம் தெரிந்த தமிழ்ப்பட ரசிகர்கள் கேரளாவில் சம்பவம் செய்ய கிளம்பிவிட்டது தமிழ் சினிமா என கமெண்ட் போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here