விஜய்யின் பிகில் படத்தின் கதை திருட்டு புகார் வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், அர்ச்சனா கல்பாத்தி அவர்களின் தயாரிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் பிகில்.
இந்த படத்தின் கதை என்னுடையது என அம்ஜத் மீரான் என்பவர் 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அம்ஜத் மீரான் வழக்கு செலவுத் தொகையை செலுத்தவில்லை. இதனால் அவரது வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம், அட்லி, அர்ச்சனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
தமிழ் சினிமாவில் தான் எடுத்த முதல் படம் முதல், இறுதி படம் வரை கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குனர் அட்லி அவர்களுக்கு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here