சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் சீரியல் நடிகர்…

0
386

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைய காலநிலையில் சினிமா என்பது ஒருமுக்கிய அங்கமா திகழ்கிறது. பலரும் பல கனவுகளோடு சினிமா துறையில் தடம் பதித்து தங்களோட வெற்றியை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் வங்கியில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியதா முன்னணி சினிமா டைரக்டராக இருக்கிறார் அவர் வேறு யாருமல்ல லோகேஷ் கனகராஜ் தான்.

அந்த வரிசையில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்த பாருக் அப்துல்லா தற்போது இயக்குநர் ஆக மாறி இருக்கிறார். இவர் துருவன், டாம் & ஜெர்ரி மற்றும் குற்றமே காக்க என ஷார்ட் பிலிம் மற்றும் இருபதிற்கும் மேலான விளம்பரங்களையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் OTP என்ற ஷார்ட் பிலிமை இயக்கி பின்பு அதனையே வெள்ளித்திரை படமாக இயக்கி வருகிறார். இதற்கான பூஜை இன்று திருச்சியில் போடப்பட்டது. இத்திரைப்படத்தில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் குமார் ஆக நடித்து வரும் ஸ்ரீ தேவா கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் கதாநாயகி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பவித்ரா கதையின் நாயகியாவும், முதன்மை கதாப்பாத்திரத்தில் சாந்தினி தமிழரசன் , பக்ஸ் , மூணார் ரமேஷ் போன்ற முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. மேலும் இத்திரப்படத்தில் தமிழக கிரிக்கெட்டர் ஒருவரை சிறப்பு தோற்றத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது.

இப்படத்தை உங்கவீடு production என்ற பேனரில் சதீஷ் ஜெகநாதான் மற்றும் யாழ் மீடியா கிராஃப்ட் என்ற பேனரில் ஆமினா அம்மாளும் தயாரிக்கின்றனர். திருச்சி , சென்னை , மும்பை , புனே என பல்வேறு இடங்களில் படப்பிட்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் பாருக் அப்துல்லா தெரிவித்துள்ளார் . மேலும் அவர் படத்தை பற்றி அவர் கூறுகையில்

“இது மொபைல் சுற்றி நடக்கும் கதைக்களமாக இருக்கும். எல்லார் லைஃப்லையும் மொபைல் முக்கிய ஒண்ணா இருக்கு அப்டி இருக்குற மொபைல் நம்ப என்ன மாரி பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்பது தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. பல்வேறு உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது குறிப்பாக FAKE LOAN APPS பின்னணியில் இருக்கும் மோசடி பற்றிய படமாக இருக்கும் “என கூறியுள்ளார்…

படத்தில் இருக்கும் முக்கியமான நபர்களான இயக்குனர் , நடிகர் , நடிகை , இசையமைப்பாளர் , ஒளிப்பதிவாளர் என அனைவரும் திருச்சி , படத்தின் பூஜையும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் போடப்படடத்து என்பது குறிப்பிடத்தக்கது..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here