லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய பாடல்களுக்கு கவுரவம்

0
65
A tribute to Indian songs in Los Angeles

A tribute to Indian songs in Los Angeles : உலகம் முழுவதும் இந்திய இசையின் பெருமையை தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் கூறியுள்ளது.

A tribute to Indian songs in Los Angeles

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ரிலீசான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரது நடிப்பில் ரிலீசான இத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும், சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது.

எத்தனையோ ஆண்டு கனவாக இருந்த புகழ்பெற்ற ஆஸ்கார் விருதை ஆர்ஆர்ஆர் படம் பெற்று இந்திய சினிமாவின் பெருமையை ஆஸ்கார் மேடையில் நிலை நிறுத்தியது.

இதுபோன்று 2009-ல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலும் ஆஸ்கார் விருதை வென்றது. ஏற்கனவே அமீர்கான் நடித்த லகான் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. உலக சினிமா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ள இந்த பாடல்களை தற்போது அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸ், மியூசிக்கல் டேப்ஸ்ட்ரீஸ் என்ற பெயரால் ஒளிபரப்பி கவுரவிக்க போவதாக அறிவித்து உள்ளது.

வருகிற 18-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டேவிட் ஜப்பேன் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 3 இந்திய பாடல்களையும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்திய இசையின் பெருமையை தெரியப்படுத்த வேண்டும் என்பற்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று ஆஸ்கார் அகாடமி மியூசியம் தனது அதிகாரபபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here