கோலிவுட், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தனது வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்ததாக பொது மேடையில் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம்-தூம், சந்திரமுகி-2 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தவர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்திலும் அவர் நடித்து இருந்தார்.

பாலிவுட் சினிமாவில் கங்கனா மிகப்பெரிய நடிகை தான். அவர் தற்போது நடிப்பில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது இவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
சர்ச்சை பேச்சு:-
தற்போது எம்பி-யாக இருந்து வரும் கங்கனா சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருக்கும் தனது வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்திருக்கிறது என புகார் கூறினார்.


மின் வாரியம் விளக்கம்:-
இந்நிலையில் Himachal Pradesh State Electricity Board Limited (HPSEB) விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், கங்கனா கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் சரிவர செலுத்தவில்லை என்பதால் தான் இப்படி என தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கங்கனாவுக்கு இந்த விஷயத்தை கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here