இன்று ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
நடிகர் அர்ஜுன்
ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்து வருகின்றார்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், இன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த வருடம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களின் திருமணம் இன்று ஆஞ்சநேயர் கோவிலில் கோலகலமாக நடந்துள்ளது.
திருமணத்தை தொடர்ந்து ஜுன் 14ம் தேதி சென்னை நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த வரவேற்பு விழாவில் ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உமாபதி, அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

உமாபதியும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகின்றார். திருமண நிகழ்ச்சியில் அர்ஜுன், தம்பி ராமையா இருவருமே பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் காட்சியளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



மேலும் திருமணத்தில் மாலை மாற்றும் போது உமாபதி தனது கழுத்தில் ஐஸ்வர்யாவை மாலையை போடவிடாமல் சேட்டை செய்து விளையாடியுள்ளார். ஐஸ்வர்யாவும் மாலை மாற்ற முயற்சித்த போது உமாபதி சட்டென ஐஸ்வர்யாவிற்கு மாலையை அணிவித்துள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here