ஆரம்பமானது “சுந்தரா டிராவல்ஸ்-2” : ரசிகர்களுக்கு இன்னொரு சிரிப்பு விருந்து

0
88

கடந்த 2002ஆம் ஆண்டில் முரளி, வடிவேலு கூட்டணியில் வெளிவந்த படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இப்படம் இப்படம் வெளியாகி பலத்த வெற்றியை பெற்றது. இன்றும் தொலைக்காட்சியில் “சுந்தரா டிராவல்ஸ்” படம் போட்டி சிறிது முதல் பெருசு வரை எல்லோரும் உட்கார்ந்து பார்ப்பாங்க. அந்தளவுக்கு சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.

இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘ஈ பறக்கும் தளிகா’ என்கிற படத்தின் ரீமேக் ஆகும். மலையாள படத்தை இயக்கிய தாஹாவே தமிழிலும் இயக்கினார். காமெடிக்காகவே படம் வெற்றி பெற்றது.

நீண்ட வருடங்களாக சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம் உருவாகிறது என தகவல்கள் கூறப்பட்டது. இந்த நிலையில் சுந்தரா டிராவல்ஸ் 2ஆம் பாகம் குறித்து அறிவித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய தாஹா இந்த பாகத்தை இயக்கவில்லை. இந்த பாகத்தை கருப்பு தங்கம் என்பவர் இயக்குகிறார்.

இந்த பாகத்தில் கருணாஸ், கருணாகரன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனும் நடிகராக அறிமுகமாகிறார்.

கொடைக்கானல், பன்றிமலை போன்ற பகுதிகளின் அடர்ந்த வனப்பகுதிகளிலும் , தென்காசி, காரைக்குடி, சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு “சுந்தரா டிராவல்ஸ்- 2 படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறுமென கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த ஆண்டு ” மத ககத ராஜா” படம் வெளியாகி ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமைந்தது. அதனை தொடர்ந்து இந்த படமும் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here