நடிகை ஜெயசுதா
70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசுதா. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். நடிகை ஜெயசுதா ஏற்கனவே 2 திருமணம் செய்துகொண்டுள்ளார். மூன்றாவது திருமணம் பற்றி வதந்திகள் வெளியான நிலையில், அது உண்மைகிடையாது என மறுத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எந்த கதாநாயகனின் மீதாவது காதல் ஏற்பட்டதா என்ற வினாவிற்கு ஜெயசுதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஹீரோக்கள் மேல் வந்த ஈர்ப்பு
இதற்கு “நான் கதாநாயகியாக இருந்த போது தெலுங்கு கதாநாயகர்கள் மீது எனக்கு கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால், அது காதலா அல்லது வெறும் ஈர்ப்பு தானா என்று எனக்கு புறியவில்லை. ஆனால், அது பல காலம் நீடிக்கவில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மேல் ஒரு க்ரஷ் இருந்தது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன், அது நடக்கவில்லை”. என்றார்.

இதன்பின் அவர் கூறிய விஷயம் சற்று அதிர்ச்சியை உண்டாக்கியது. அது என்னவென்றால் “நான் ஒரு பாடகரையும் காதலித்தேன். அவரை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால், சில ஆண்டுகளுக்கு பின் தான அவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிந்து கொண்டேன். பிறகு நான் அதை செய்யவேண்டாம் என்று உணர்ந்தேன். எனக்கு இனிமேல் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here