Prasanth got an expensive car to overtake Vijay : 90களின் காலகட்டத்தில் பெண் ரசிகைகளை தன் வசம் கட்டி வைத்திருந்தவர் நடிகர் பிரசாந்த். அப்போதெல்லாம் காதலில் பெயிலியர் ஆனவங்க, ஒரு தலை காதலில் உள்ளவர்கள் தான் விஜய் படத்தை அதிகமாக கொண்டாடி வந்தார்கள்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழா மாறி போயிடுச்சு. தமிழ் சினிமாவுலகின் முடி சூடா மன்னனாக விஜய் திகழ்ந்து வருகிறார். பிரசாந்த் பீல்டவுட் ஆன 90ஸ் கதாநாயகனாக ஆகிவிட்டார். பிரசாந்துக்கு பெரிதாக கூறும் அளவுக்கு படங்கள் எதுவும் கிடையாது.

Prasanth got an expensive car to overtake Vijay
சினிமாவில் நீடித்து நடிக்க வேண்டும் என்றால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று இருந்து விட கூடாது என்பது இப்போதான் அவருக்கு புரிந்திருக்கிறது. அந்த சமயத்தில் பிரஷாந்திற்கு கை கொடுத்திருப்பது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படம் தான்.
பிரசாந்த், லைலா, பிரபுதேவா மற்றும் சினேகா என பெரிய 90ஸ் கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரசாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மேலும் ஒரு பெரிய காரணம் உள்ளது. பிரசாந்த் நடிப்பில் உருவாகிய அந்தாதுண் படம் ஒரு சில ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
GOAT படத்தின் மூலம் தன்னை ஒரு ஆக்டிவ் நாயகனாக பிரசாந்த் நிலை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தான் அந்தாதுண் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்..இதனால்தான் இந்த படத்தை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி மாற்றிக் கொண்டார் பிரசாந்த்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஏப்ரல் 6 ந் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பிரஷாந்த் அப்பா தியாகராஜன் அவருக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார். இந்த பரிசு வழங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி உள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை ஒன்றிலிருந்து தியாகராஜன் பிரசாந்தை வெளியே அழைத்து வருகிறார். அப்போது அங்கு பி எம் டபிள்யூ கார் ஒன்று இருக்கிறது. அந்த காரைத்தான் அவருடைய அப்பா தியாகராஜன் அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க : அரண்மனை 4 படத்தில் நடிப்பதிலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்து உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி

இந்த காரின் மதிப்பு ஒரு கோடியே 60 லட்சமாகும். விஜய் படத்தில் நடித்தால் மட்டும் போதாது, விஜய் போல தன்னையும் கெத்தா காட்ட முடிவு செஞ்சிருக்காரு போல பிரசாந்த். விஜய் 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயஸ் காரில் படபிடிப்புக்கு சென்று வருகிறார்.
அப்படிஉள்ள போது டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரு கோடியில் ஆவது கார் வச்சிக்கிட்டா தான் அவருக்கும் கொஞ்சம்மதிப்பா இருக்கும் போல. அதனாலதான் தியாகராஜன் இப்படி ஒரு பரிசை வழங்கியுள்ளார். சமீப காலமாக டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் என்ற வார்த்தை பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. நிஜமாலுமே பிரசாந்த் தான் டேட்ஸ் லிட்டில் பிரின்ஸ் என்பதற்கு தகுதியுள்ளவர்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி
— Kollyflix (@Kollyflix) April 6, 2024
நடிகர் பிரசாந்த்@actorprashanth pic.twitter.com/Hp3wt2Cf1m
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here