Vijay Sethupathi withdraws from aranmanai-4 : ஏப்ரல் மாதம் அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ளது, இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி விலகியது பற்றி சுந்தர் சி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர் சி. அவரது திரைப்பயணங்களில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் அரண்மனையும் ஒன்று. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாகத்தை இயக்கினார் சுந்தர் சி. அப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம் மற்றும் வினய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தததால் அதன் இரண்டாம் பாகத்தை 2016-ம் வருடம் இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி.

அரண்மனை படத்தின் 2 ஆம் பாகத்தில் ஹன்சிகா, திரிஷா, பூனம் பாஜ்வா உள்ளிட்டோருடன் சூரி, சித்தார்த் மற்றும் சுந்தர் சி இவரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். அரண்மனை முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூலை வாரிக்குவித்தது. அதனால் அப்படத்தின் 3 ஆம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி வெளியிட்டார். இதில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இதையும் படிங்க : கமலுடன் கௌதமி மகளை தொடர்புப்படுத்தி கூறிய பத்திரிகையாளர்.. என்ன இது போல சொல்லிருக்காரு?
இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் முதல் 2 பாகங்கள் அளவுக்கு திரைக்கதை அமையாவிட்டாலும் பேமிலி ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பினால் அரண்மனை 3-ம் பாகமும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தற்போது அப்படத்தின் 4 ஆம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. இதில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா போன்றோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சுந்தர் சி-யே இப்படத்தில்கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் திரைக்கு ஏப்ரல் மாதம் வருகிறது.
Vijay Sethupathi withdraws from aranmanai-4
இந்நிலையில், அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சுந்தர் சி, இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியது ஏன் என்பதை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில்படப்பிடிப்பு தாமதம் ஆனதால் கால்ஷீட் பிரச்சனை உண்டாகி அவர் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறிய சுந்தர் சி. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்ட தன் விளைவாக தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
#RaashiiKhanna and #TamannaahBhatia pic.twitter.com/UCfawyqLao
— Kollyflix (@Kollyflix) March 31, 2024
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here