ரஜினியிடம் ஹெல்ப் கேட்கும் பிஜிலி.. மோசமாக திட்டிய வலைப்பேச்சு அந்தணன்

0
209

Rajini:காமெடி நடிகரான பிஜிலி ரமேஷின் நேர்காணல் வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் அதிகமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த பிஜிலி பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் பிராங்க் வீடியோவின் மூலமாக பிரபலமானவர்தான்.

இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு வர ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் ரிலீசான நட்பே துணை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கோமாளி, பொன்மகள் வந்தால் ஆகிய சில படங்களில் நடிக்க வாய்ப்பு உண்டானது.

பிஜிலி ரமேஷ் அதிகமாக ரஜினியின் கெட்டப்பில் மற்றும் அவரது டயலாக்களை பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில் அதிகமாக குடித்ததால் அவருக்கு இப்போது உடல் நிலை மோசமாகிவிட்டது. இதனால் வயிறு வீங்கி பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் உள்ளார்.

பிஜிலி ரமேஷ் கேட்ட உதவிக்கு அந்தணன் பேச்சு

இதனால் ஊடகங்கள் மூலமாக பிஜிலி ரமேஷ் மற்றும் அவரது மனைவி சினிமா பிரபலங்களிடம் ஹெல்ப் கேட்டு வருகிறார்கள். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக தனது கணவருக்கு உதவி செய்ய வேண்டும் என பிஜிலியின் மனைவி கேட்டிருந்தார்.

இதைப் பார்த்த வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கப்பட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதாவது அம்பானி வீட்டு திருமணத்திலேயே பணத்திற்காக ரஜினி ஆடினார் என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

அவர் இவ்வாறு சொத்து சேர்ப்பதற்கு காரணம் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். சினிமாவில் வெயில், மழை என பார்க்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். சும்மா இல்லாமல் குடித்து விட்டு தனது உடம்பை கெடுத்துக் கொண்டு இப்போது ரஜினி உதவி செய்ய வேண்டும் என்பது எவ்வாறு நியாயம்.

மேலும் பிஜிலி ரமேஷின் வீடியோ கீழே பார்த்தால் 90 சதவீத மக்கள் அவரை திட்டி தான் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். இப்போது குடிப்பழக்கம் மோசமாகி கொண்டிரும் நிலையில் வீட்டிற்க்கே டோர் டெலிவரி செய்யும் அளவுக்கு மது வியாபாரத்திற்காக அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியவில்லை என தனது ஆதங்கத்தை அந்தணன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here