சீதா ராமம்’ என்ற ஒற்றை திரைப்படத்தில் நடித்ததின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் தான் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்த இவருடைய திறமை மற்றும் உழைப்பே இந்த உயர்விற்கு காரணம் என்று கூறினால் அதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இருக்கப்போவதில்லை.
‘சீதா ராமம்’ படத்தின் அதீத வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் எல்லா மொழி படங்களிலும் நடிப்பதற்கு கூப்பிடப்படும் மிருணால் தாக்கூர் தற்போது ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான பான் இந்திய திரைப்படமான ‘கல்கியில்’ சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார் மிருணால் தாக்கூர்.

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் மிருணால் தாக்கூருக்கு திரைத்துறை மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வருகிறது..இவ்வாறு இருக்க மிருணால் தாக்கூருக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சிறப்பு போஸ்டர் வாயிலாக தெரிவித்திருக்கிறது முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

லைக்கா தனது உத்தியோக பூர்வ X தள பக்கத்தில் பிறந்த நாள் போஸ்டருடன் “அழகான நடிகை மிருணால் தாக்கூர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் வெற்றி மற்றும் பிளாக்பஸ்டர் தருணங்களால் நிரப்பப்படட்டும். உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சிகளால் மனங்களைத் திருடிக்கொண்டே இருங்கள்!” என்ற வாழ்த்து செய்தியையும் பகிர்ந்துள்ளது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்..
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here