தென்னிந்திய நடிகர்கள் தனி பங்களாக்களை தனக்கென வைத்துள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தனி பங்களா
தென்னிந்திய திரைப்படங்களில் நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் நடிகர், நடிகைகள் பல பேர் மும்பையில் பங்களா போன்று பிரமாண்டமான வீடுகளை வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் மும்பையில் சொகுசு பங்களா வைத்து உள்ளனர் தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள். மும்பையில் பிரமாண்டமான பங்களா ஒன்றை சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து வாங்கி குடியேறினார்கள்.
ஜோதிகாவுக்கு சொந்த ஊர் மும்பை என்பதால், தனது மனைவியின் விருப்பத்திற்கு இணங்க சூர்யா அங்கு வீடு வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் மாதவன் சென்னை, துபாய் தற்போது மும்பையிலும் சொகுசு பங்களா ஒன்றை வைத்துள்ளார்.

மும்பையில் காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமாகி, தமிழிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

ஐதராபாத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வைத்திருக்கும் தெலுங்கு முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் தற்போது மும்பையில் மிகவும் அதிக விலை மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பூஜா ஹெக்டேவும் மும்பையில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here