Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஏங்க… இங்க இருந்து ரோட்ட காணோங்க..! : கார் பார்க்கிங் ஏரியவாக மாறிய சென்னை கிரி சாலை

சென்னையில் அதிக வாகனங்கள் சென்றுவரும் ஜி.என் செட்டி சாலையிலுள்ள கிரி சாலை தனியார் உணவகங்களால் கார் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது. இதுகுறித்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை…

சென்னையில் அதிக வாகனங்கள் சென்றுவரும் ஜி.என் செட்டி சாலையிலுள்ள கிரி சாலை தனியார் உணவகங்களால் கார் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது. இதுகுறித்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள ஜி.என் செட்டி சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள “கிரி சாலை “ எப்போதும் போக்குவரத்து நெரிசலாக தான் இருக்கும்.

கிரி சாலை இப்போ பார்க்கிங் ஏரியா :-

காரணம என்னவென்றால், கிரி சாலையில் மூன்று பிரபல தனியார் உணவகங்கள் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கார்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே, அதாவது சாலை வழியாக மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல முடியாதபடி கார்களை நிறுத்தி விடுகிறாரகள். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் உணவகங்கள் கண்டுகொள்வதே இல்லையாம்..!

காலை 12 மணி முதல் மாலை, இரவு நேரம் என எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கார்களில் வெளியே சென்று வர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
இந்த சாலையை கடப்பதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆவதாக மக்கள் வேதனை அடைகிறார்கள்.

Advertisements

பிரபலங்கள் பயன்படுத்தும் சாலை பாதிப்பு

சினிமா பிரபலங்களில், சின்னத்திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி தினமும் சென்று வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து போக்குவரத்து போலீசாகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மக்கள் பயன்படுத்தும் கிரி சாலையை தனியார் உணவகங்கள் பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளது கண்டனத்துக்குரியது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து பார்க்கிங் ஏரியாவை அப்புறவுப்டுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News