கருடன்
கைச்சுவை நடிகராக இருந்து இன்று கதாநாயகனாக மாறியுள்ளார் சூரி. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ள சூரியின் நடிப்பில் நேற்று ரிலீசான திரைப்படம் தான் கருடன்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரியுடன் சேர்ந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, வடிவுக்கரசி மற்றும் ரோஷினி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் நாள் வசூல்
மக்களிடையே சிறந்த வரவேற்பினை பெற்றிருக்கும் கருடன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் முதல் நாள் இப்படம் ரூ. 4 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
விடுதலை படத்திறகு பிறகு சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் கருடன் படத்திற்கு முதல் நாளே சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் எப்படி இருக்க போகிறது என்று.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here