முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தல பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
உலக நாயகன் என அனைவராலும் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழ் திரையுலகின் முக்கிய தூணாக விளங்கி வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்களும், திரை துறையினரும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றன.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தலபக்கத்தில் நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் – கலை ஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! என்றும்
நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் – திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


