child actress tharini-recent photo goes viral : பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமான மனோன்மணி கேரக்டரில் நடித்த நடிகை தாரணியின் தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் பசங்க திரைப்படம் உருவானது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த பசங்க படம் அவருக்கு முதல் படம்.

இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் சிறுவர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
பாண்டிராஜின் பசங்க திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. அந்த படத்தில் அன்புக்கரசு கேரக்டரில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மேலும் பசங்க திரைபடத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் மற்றும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்தது.

இந்த படத்தில் பாண்டிராஜ் தனது சிறப்பான இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் அவர்களின் வாழ்வியல், நண்பர்கள், கல்வி , யதார்த்தமான பள்ளி செல்லும் பருவத்தை மக்கள் மனதில் அழகாக பதியச்செய்திருப்பார்.
நடிகர் விமலும் இந்த படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மனோன்மணி ரோலில் நடித்த தாரிணி, லக்ஷ்மி மேனனுடன் கொம்பன் படத்தில் நடித்திருப்பார்.

இவரின் தற்போதைய போட்டோக்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here