தல பிறந்தநாளில் இந்த படம் ரீ-ரிலீஸ்? : ரசிகர்கள் கொண்டாட்டம்

0
169

நடிகர் அஜித் குமார் அவர்களின் பிறந்த நாளான மே-1ம் தேதி அவர் நடித்த “கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்தப்படம் அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு பெறுகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியிருப்பார்.

தற்போது தமிழ் சினிமாவின் புதுப்படங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாலும்; புதிய படங்கள் சரியாக ஓடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதன் காரணமாக நிறைய பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் பரவியுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித் குமார் அவர்களின் பிறந்த நாளான மே-1ம் தேதி அவர் நடித்த “கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனை ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடி வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here