ரஜினிகாந்த் படத்தில் அம்மாவாசை நடிகர் : மீண்டும் வில்லனா?

0
157

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் ‘ராஜசேகர்’ கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் அவர்களின் முந்திய படமான லியோ படம் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்தது. 

கலவையான விமர்சனங்களுடன் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இருப்பினும் ரசிகர்கள் படத்தை கொண்டாடவில்லை. மாறாக இயக்குநரை திட்ட தான் செய்தார்கள்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் பிரதான வேடங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கூலி படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதிஹாசன் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்திருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் ‘ராஜசேகர்’ கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here