நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் “மாமன்” திரைப்படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூரி, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘மாமன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படக்குழு:-
குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாகவும், ஸ்வாசிகா சூரியின் தங்கையாகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சூரி, அவரை ஆரத்தழுவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், விலங்கு வெப் சீரீஸ் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் மாமன் என்ற படத்தில் சூரி தற்போது பணியாற்றி வருகிறார்.
கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படம் நடிகர் சூரிக்கும், நடிகர் ராஜ்கிரன் அவர்களுக்கும் முக்கிய படமாக அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த படம் கோடை விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here