21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் ஆட்டோகிராப் : இயக்குநர் சேரனின் முகநூல் பதிவு என்ன?

0
21

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன்.

இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இந்தப் படத்திற்காக இயக்கம்  சேரன் தேசிய விருது வென்றார்.

இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

3 தேசிய விருதுகள்:-

படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார். மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் ஹிட்டானது.

ஆட்டோகிராப் வெளியான போது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலை பாடிய சித்ரா, எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.

இந்தப் படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தம் புது நவீன டிஜிட்டல் முறையில் அடுத்த மாத 16ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here