அது ஆணாதிக்க திமிர் : இயக்குநர் பாலாவை கடுமையாக சாடிய மக்கள் இயக்குநர்

0
23

இயக்குநர் லெனின் பாரதி, இயக்குநர் பாலாவை கடுமையாக சாட்டி இருக்கிறார்.

அவரது படங்களில் ஆணாதிக்க சிந்தனை தான் அதிகம் உள்ளது. பெண்களை அடித்து துன்புறுத்தி காயப்படுத்தும் காட்சிகள் தான் அதிகம் உள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார் இயக்குனர் லெனின் பாரதி.

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லெனின் பாரதி அவர்கள் கூறியதாவது,
இயக்குநர் பாலா என்ன பெரிய இயக்குநர் தனது படங்களில் பெண்களை தலைமுடியை பிடித்து அடிப்பது, கொடுமைப்படுத்துவது போன்ற காட்சிகளை வைக்கிறார்.

மேலும், ஆண் தான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்கிற ஆணாதிக்க புத்தியுடன் தான் படங்களை இயக்கி வருகிறார், மிஷ்கினை வைத்து இயக்கிய போக்ஸோ காட்சியில் கூட ஆண்களை சேப் கார்டு செய்யும் காட்சியாகவே வைத்திருக்கிறார்” என்று அவர் குற்றச்சாட்டினார்.

இயக்குநர் லெனின் பாரதி “மேற்குத் தொடர்ச்சி மலை” என்னும் படத்தின் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று பலவது பாராட்டுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here